போய் வருகிறேன் அமெரிக்கா!
போய் வருகிறேன் அமெரிக்கா!
அகதியாய் என்னை அலையவிட்டாய் முன்னாள்
ஆறுதல் தந்து அழகு காட்டினாய் பின்னாள்
உன் இடையில் அமர்ந்து
தலை வரை கண்டுகொண்டேன்
விடைபெறும் நேரம் – மீண்டும்
இடையில் இருக்கின்றேன்
கலையுடன் கனிவுடன் பேசும்
மக்களை நீ கொண்டாய் – ஆதலாலோ
அகிலம் ஆளும் அதிகாரம் நீ கொண்டாய்
நல்பழகிடும் பண்பை நீ கொண்டாய் – மக்கள்
பாதுகாப்பாய் செல்லும் பயணம் நீ கொண்டாய்
சிறு நகரிலும் பெரும் கடைகள் நீ கொண்டாய்
சிறு தொழில் எதுவும் நீ கொள்ளலையே!
வாழும் வீட்டின் அளவும் அதிகம் நீ கொண்டாய்
அடுத்தவர் யாரென இவர் அறியலையே!
சாலையில் நல்அகலம் நீ கொண்டாய்
உதவி கேட்டு நிற்பவர்க்கு உதவ ஆளில்லையே!
என் பண்பாடோடு பழகும் பண்பை கற்றுகொண்டேன்
விதிகளை மதிக்கும் மதியை மெருகேற்றி கொண்டேன்
கனவு உலகம் என்று உலகம் சொன்னதை
கொஞ்சம் கண்டுகொண்டேன்
கனவுகள் என்பது கொஞ்ச நேரம்
நிஜமே என்றும் நிரந்தரம்
போய் வருகிறேன் அமெரிக்கா!