அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்திடு.
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்திடு,
பார்த்திடுவோர் வியந்திடவே,
எத்தனையோ தடைகள் உன்னை,
எதிர்த்து நின்றாலும்,
அத்தனையும் வீழ்ந்திட உன்,
ஆற்றல் காட்டிடு,
எழுந்திடு நீ, தோள் கொடுத்து,
வாழ்க்கை எனும் சக்கரத்தை,
வாழ்ந்து காட்டிடு,
எத்தனைநாள் இருப்பாயோ,
இவ்வுலகில் பிறந்த பின்னர்,
சந்ததிகள் புகழ்ந்திடவே,
சரித்திரத்தில் உன் தடயம்,
பொன் குறியாய் பதித்து விடு.
இந்த மண்ணில் உள்ள,
மரங்களும் செடிகளும்,
கற்களும் பொற்களும்,
தொன்றி மடிவது போல்,நீ,
மாண்டு மடிந்தால்
உன் பிறவிக்கு என்ன பயன்?
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்திடு,