கொடிய பாவி அவள்..!

கொப்பும் குழையுமாய் பூத்திருக்க
மப்பும் மந்தாரமுமாய் மயங்கி நிற்க
விளைந்த காட்டிற்கு வேலியாய் சேலை இருக்க!

அவன் உன்னை கடந்து செல்லுகையில்
களுக்கென்று நீ சிரிக்க,
பச்சைக்கொடி கிடைத்துவிட்டதென்று அவன் பாய

வீரப்பரம்பரையில் பிறந்த நீயும்
விரகதாபத்துக்கு அடிபனிந்ததேனோ?
கசக்கிய பூவில் எச்சிலை துப்பிவிட்டுச் சென்றான்!

ஐயகோவென்று நீ ஆர்ப்பரித்திருக்கலாம்
அடியோடு என்னை அழித்திருப்பார்கள்
அகம்பாவம் பிடித்தவளே அமைதியாய் நீயும் இருந்ததேனோ?

வாயும் வயிறும் பெறுக்கையில்
வாயடைத்துப் போனார்கள் உன் பெற்றோர்கள்
நீந்து போன உன் கற்பை மீட்டெடுக்கவா முடியும்?

சண்டாளி உனக்கு நான் என்ன தீங்கு இழைத்தேன்
சேலைக்குள் மறைத்த என்னை
பானைக்குள் மரிக்கவைத்ததேனோ?

பத்து சுவாசம் வந்திருக்குமா என்னிலிருந்து?
பட படத்தது என் இதயம்
பாவிகளா என்னை என்ன செய்தீர்கள்
முள்ளாய் ஏதோ குத்துகிறதே

சுவாசம் விடமுடியாமல்
நெளிந்து நெளிந்து துடித்துத் துடித்து
மெல்ல மெல்ல மரணம் என்னைத் தழுவியது...!

எழுதியவர் : நா.வளர்மதி. (2-Sep-12, 5:10 pm)
பார்வை : 217

மேலே