பூமி

தன்னுடலில் இல்லை உனக்கோர்
சொந்த பகுதி !

உன்னை கூறு போட
இவர்களுக்கு என்ன தகுதி !

உன் வயிற்றை குத்தி கிழிதுப்பார்தார்கள்
ரத்தத்திற்கு பதிலாக சுத்த நீரே வந்தது !

உன் மேல் பெரும் சுமையென
கட்டிடங்கள் எழுப்பி பார்த்தார்கள்
பெருவாழ்வு கிடைத்தது !

உன்ன சுரண்டி சுரங்கம் செய்தார்கள்
கனிமங்கள் கிடைத்தது !

பூ மனம் கொண்டவள் நீ

பூ மனம் மாறி போர்குணம் கொண்டால் உலகம் ஒரு கணத்தில் உலகமில்லை !

எழுதியவர் : குல்ஷன் (2-Sep-12, 5:16 pm)
Tanglish : poomi
பார்வை : 123

மேலே