இடப்பெயர்ப்பு !
என் தாய் மண்ணே !
உனக்கு ஏன் இந்தகோபம்?
எம்மை ஏன் விரட்டினாய் ?
காலகாலமாய் இடப்பெயர்ப்பு.
திரைக்கடலோடும் கண்டுபிடிப்பு,
ஓடிய ஐரோப்பியர்களை பாருங்கள் ,
அமெரிக்க கண்டம் அவர்களுடையது,
ஓடிய சீனர்களை கவனியுங்கள்.
ஒவ்வொரு நகரிலும் துணைநகரம்,
வணிக கோடி அணியும் வண்ணமயம்,
ஓடிய இந்தியர்கள்,
பணிந்து வாழும் இடம் மலேசியா,
பயந்து வாழும் இடம் ஸ்ரீலங்கா.
ஒடுக்கப்பட்ட இடம் பிஜி,
ஓட இயலாத இந்தியர்கள்,
வாழ வழி இல்லாத இடம் இந்தியா.
ஓட்டம் எடுத்தவர்கள் திரும்பி வந்து,
ஆட்டம் போடும் நாடு இந்தியா,
எண்பது சதவிகித வறியவர்கள்,
உணவுக்காக வீதி எங்கும்,
கடல் அலையாக தடுமாறுவதால்.
கப்பல் ஏற வில்லையோ ?