ஏன் என்ற கேள்வி .....

ஏம்பா பிச்சை எடுக்குற ?

கேட்ட கேள்விக்கு பதில் இல்லை

எதிர் கேள்வி கேட்டான் தம்பி அவன்

காலையில் எதாவது சாப்பிடுவாயா

ஆம் என்றேன்

மதியம் அதற்கும் ஆம்

இரவு அதற்கும் ஆம்

யோசித்தான் சிறிது நேரம் ......

எல்லாவற்றுக்குமே ஆம் என பதில் சொல்லும் உனக்கு

எப்படி புரியும் என் பசியின் வலி ?

தம்பி அவன்

கேள்வியில் பதில் இருந்தது

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (4-Sep-12, 6:42 pm)
சேர்த்தது : விசா
Tanglish : aen entra kelvi
பார்வை : 176

மேலே