ஆசிரியர் தினம் அறிவுறுத்தும் பாடம்
செப்டம்பர் 5
1889 திருத்தணியில் பிறந்த
ஏழைக்குடும்பத்தின் எழுச்சி மிகு தலைவன்
தத்துவங்கள் பல கற்ற தன்னிகரற்ற தமிழன்
பேராசிரியராய் வளர்ந்து
புதிதாய் பிறந்த இந்தியாவின்
முதல் துணைக் குடியரசுத்தலைவராய்
இரண்டாம் குடியரசுத்தலைவராய்
உயர்ந்து நின்று உயிர் கொடுத்த உத்தமர்
அவரன்றோ !டாக்டர் ராதாகிருஷ்ணன்
அவரது பிறந்த நாளன்றோ ! ஆசிரியர் தினம்
இத்தினத்திலே நாம் சூளுரைக்க வேண்டும்
பணி செய்து கிடப்பது மட்டுமல்ல
நாட்டை பாதுகாப்பதும் நம் கடன் என்று
மாணவனின் உதவித்தொகையை கொள்ளையடித்த 47 தலைமையாசிரியர்கள்
கொள்ளையை தடுக்க வேண்டியவர்களே !
வேலியே பயிரை மேய்ந்த கொடுமை
வருத்தப்பட வைக்கிறது
எங்கு நோக்கினும் ஊழல்
காசைக் கரியாக்காதே என்பது பழமொழி
கரியையும் காசாக்கு என்பது புதுமொழி
அந்நிய பல்கலைக்கழகங்கள் அத்துமீறி நுழைய
அனுமதிக்க முயற்சி
இந்திய கல்வி முறையை மேலும் சீரழிக்க
திட்டமிட்ட செயல்
கல்வி என்ற கலைமகள் விலைமகளாகி
வீதியில் நிற்கும் கொடுமை
அவளுக்கு ஆடை கொடுத்து அரவணைக்க வேண்டிய
அத்தனை கடமையும் நமக்குண்டு
அந்நிய முதலீடுகள் அத்துமீறி நுழைகின்றன
எல்லாம் தனியார்மயம் எங்கு நோக்கினும்
தாராளமயம்
சில்லரை வர்த்தகத்தில் கூடஅந்நிய முதலீடு
சீரழிக்க முயல்கிறார்கள் நம் பாரதத்தை
தமிழர்கள் முத்துக் குளித்தார்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்
ஆனால் முறைதவறி சொத்து சேர்த்ததில்லை
இன்றுள்ள தமிழன்
தன்மானம் இழந்து சொத்து குவிக்கிறான்
ஈழத்தை உருவாக்கிய தமிழன்
இலங்கையில் கொல்லப்படுகிறான்
இங்குள்ள தமிழனெல்லாம்
தலைமைக்காக அலைகிறான்
நெருப்பிலே இந்தியா
பீனிக்ஸ் பறவையாகி இந்தியாவைக் காப்பது
நல்ல ஆசிரியரின் கடமை