தொலைந்து போன தேடல்கள் .....!!!!!
அற்பமான ஆசைகளை மனதில் வைத்து .........!!!
நுட்பமான என் வாழ்க்கையை சிதறவிட்டேன்....
காற்றை விட வேகமான என் மனதிற்கு
ஈடு கொடுக்க முடியாமல் ......!!!
சுழன்று விழுகின்றேன்...
சூறாவளி காற்றில்
அகப்பட்டவனை போல .....!!!!
நடு கடல் என்று தெரியாமல் குதித்துவிட்டு .........
கரையை தேடி என்ன பயன் ?!!!
விடிந்த பின்னும்
விடியலை நோக்கியே என் பயணம்.......
விடை தெரியாத கேள்விக்கு
விதி என்று பதில் சொல்லி..........
விடையை தேடி கொண்டிருக்கிறேன்.........!!!!
தொலைத்த இடம் தெரியாமல் ...........