நன்றி உதிர்க்கிறேன்
கடைசியாக
சிலுவை சுமப்பவருக்கு
இப்போதே
காசு தருகிறேன் !
கடைசியாக
சவப்பெட்டி சுமப்பவருக்கு
இப்போதே
பணம் தருகிறேன் !
கடைசியாக
எனக்காக ஜெபிப்பவருக்கு
இப்போதே ஜெபிக்கிறேன் !
கல்லறை திருநாளில்
பூ வாங்கி வருபவருக்கு
இப்போதே
பூ செடி வளர் கிறேன் !
எனக்காக குழி வெட்டும்
தொழிலாளி
முகம் பார்த்து
நன்றி உதிர்க்கிறேன் !