பார்த்து மெதுவா போங்க
முன்பெல்லாம்
என் தலைக்குப் பின்னால்
பூ தொங்கியது
இன்றோ உங்கள்
தலைக்கு முன்னால்
பூ தொங்குகிறது
வேலைக்குப் போகும்போது
உங்கள் முன்
சிரித்த முகமாய்
சுமங்கலியாய்
நின்ற என்னை
இப்பொழுது
அமங்கலியாக்கி
நீங்கள் சிரித்த முகமாய்
வழியனுப்புறீங்க
நான் நெற்றியில
குங்குமம் வச்ச காலம்
மாறிப்போச்சு
இப்ப உங்களுக்குப்
பொருத்தமாச்சு
நான் மனதிற்குள்
மட்டும் புலம்ப
சுற்றியிருப்பவர்கள்
காதுபட புலம்ப
சரியா சாப்பிட்ட
நேரமெல்லாம்
தவறிப்போச்சு
கனவெல்லாம்
சிதறிப்போச்சு
மனசும் பதறிப்போச்சு
சொந்தமும் உதறிப்போச்சு
எத்தனையோ முறை
கண்டிப்போட சொன்னேன்
வண்டியில மெதுவா
போங்கன்னு
தேடி வரமுடியாத
இடத்துக்கு போக
நினைச்சுட்டீங்க
என்ன இங்க
தொலைச்சுட்டுப்
போய்ட்டீங்க
தகவல் வந்து
பார்க்க ஓடிவந்த
நான்
இது அவர் இல்ல
கதறி அழுதேன்
சிதைஞ்ச முகம்
கண்ணுக்குள்ள
கிழிஞ்ச துணி
கைகுள்ள
சாகப் போன
என்னை பார்த்து
அப்பா இன்னைக்கும்
சாக்லேட் வாங்கி
வருவாரான்னு கேட்க
துடிச்சுப் போனேன்
நொடிச்சுப் போகல
புகைப்படம்
தாங்கி நிற்குது
நடந்து முடிஞ்ச
கடந்த காலம்
நம்ம பிள்ளையும்
இப்ப வண்டி ஓட்டுது
பயமா இருக்குங்க
ரொம்ப பயமா இருக்குங்க !!!!

