அழகிய கண்ணன் திருவடி சரணம்

வெண்ணை தின்றபடி கண்டிருக்கிறேன்
வேணுகானம் இசைத்தபடி கண்டிருக்கிறேன்
விளையாடி கோபியரோடு கண்டிருக்கிறேன் - நீ
விழிமூடி உறங்குவதை இனிதே காண்கின்றேன்

கண்ணா உனை காண்கையிலே
கருணை நெஞ்சில் பெருகுதப்பா.....
கவலை மறந்து உன் அழகை
கண்டு மகிழத் தோனுதப்பா......

தாயாக நான் மாறி நின்
தலை வருடி தாலாட்ட வேண்டும்
தான் என்ற அகந்தை கொன்று - நின்
தாள் வணங்கி மனம் வாழ வேண்டும்......

தூயவனே மாயவனே
ஆயர்குல மன்னவனே......
சேய் எனவே மன நிலையடைய
சிறந்த அருள் புரிவாயப்பா.......

சூது வாது அறிய மறப்பேன்
சூழ்நிலை தகுந்து மாற மறுப்பேன்....
சுகமாகவே சிரித்திருப்பேன்
சொர்க்கத்தை மண்ணிலே ரசித்திருப்பேன்....

தூங்குடா என் செல்வமே
தாங்குகிறேன் என் நெஞ்சிலே ......
ஏங்குகிறேன் உன்னை சரணடைய.....
எனக்கருள் புரிவாய் கண்ணா......!

எழுதியவர் : (7-Sep-12, 11:21 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 219

மேலே