அனாதையின் குரல்

அன்னை முகம் பார்த்ததில்லை
தந்தை குரல் கேட்டதில்லை
இன்னல் பட்டு வளர்ந்தாலும்
இரக்கப் பட கேட்கவில்லை

குழந்தையாக உள்ள வரை
குறை ஒன்றும் தெரியவில்லை
கொஞ்ச காலம் வளர்ந்த பின்னால்
குறையத் தவிர எதுவுமில்லை

வாழ்வு எதிர் நீச்சல் என்று
வளரும் போதே தெரிஞ்சதனால்
வயது வந்த பின்னாலே
வருத்தப் படத் தெரியவில்லை

உறவு என்று சொல்லிக்க
ஒரு மனிதன் இல்லைம்மா
ஊரெல்லாம் உறவு என்று
உள்ளம் ரொம்ப விரிஞ்சதம்மா

முதல் உறவு எங்களுக்கு
முதல் இரவில் பிறந்ததுங்க
முத்தாக பிள்ளை வந்து
மகிழ்ச்சி சொல்ல வச்சுதுங்க

கட்டுப் பட்டு வளர்ந்ததனால்
கவலை இன்றி வாழுகிறோம்
கர்வப் பட்டு சொல்லவில்ல
கத்துக்கவே கேட்டுக்கிறோம்

அநாதையக் கண்டாக்க
அனுதாபம் தேவை இல்ல
அரவணைக்கக் கத்துக்குங்க (பின்ன)
அவர்களுக்கு சோகம் இல்ல

எழுதியவர் : நா.குமார் (9-Sep-12, 12:05 am)
சேர்த்தது : kavikumar09
பார்வை : 139

மேலே