அடி மனது ஆத்திரம்

அடி மனது ஆத்திரம்
அழித்து விட வேண்டும்
அணு அணுவாய் சேர்ந்து (நம்மை)
அழித்து விடக் கூடும்

கோபமென்று வந்துவிட்டால்
கொட்டிவிட வேண்டும்
கொழுந்து விட்டு எரிந்து விட்டால்
குற்றம் கொஞ்சமாகும்

கோபத்தை சேர்த்து வைக்க
வங்கி எங்கு உண்டு
சேர்த்து வைத்த கோபம் (நம்மை)
சிதைக்க வரும் கண்டு

புவியில் கோபம் இல்லாத
புத்தர் காந்தி இல்லை
ஏறி இறங்கும் கோபத்தினால்
இல்லை அதிகம் தொல்லை

எழுதியவர் : நா.குமார் (8-Sep-12, 11:53 pm)
சேர்த்தது : kavikumar09
பார்வை : 172

மேலே