வலி, என் வரமா ?

துருப் பிடித்த
என்னிதயத்துக்கு
வண்ணமடிக்க
தூரிகைகள் தேவை !

குருதி வாடை
கலந்து வீசும்
என்னிதயத்துச் சந்துகள்
கசக்கின்றன !

மனதடியில்
மடிந்துக் கிடக்கும்,
என் வலிகளின்
வாக்குமூலம்
பேச்சற்று போய்
பெருங்காலம் ஆகிறது !

என் உணவுப் பாதையும்
உணர்ந்த ஒன்றுதான்,
நன் கடந்து வந்த பாதை !

களிப்பென்பது
என்னை கடந்து போகும்
கானல் நீரின் நிழலே !
வலியின் வசைவு
நிற்காது போலும் - மூச்சே
நிற்கும் பொழுதிலும் !

எழுதியவர் : வினோதன் (9-Sep-12, 2:04 am)
பார்வை : 203

மேலே