கண்ணீரே !
வெற்றுப் பாலைவனத்தில் தண்ணீர் தேடி அலைந்தேன்
பாலை வனத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று
ஒரு சிறு துளி என் காலில் விழுந்தது
மகிழ்ந்து போனேன் நான்
தண்ணீரை பார்த்த போது உணர்ந்தேன் அது
என் கண்ணீர் என்று
கடந்து செல்ல முயன்றேன்; ஆனால் சிக்கித்தவித்தேன்
என் கண்ணீரில்
இறுதியில் ஓர் நாள் நனைந்தேன்
இன்று கண்ணீரில் அல்ல;உண்மையான
அந்த தண்ணீரில்...