தாயே...!

மாயமான இந்த உடல்
மரணித்த போதும் - அவள்
சேய்மையான குணம்தனை
சிறிதளவும் மறக்காது...!

வாய்மைப் பேச்சிலே
பேதமையவளைப் போல்
பிறிது யாரையும் காணேன் - என்
பிறப்பறிந்த நாள்முதல்..!

தெளிவான பாதைகாட்டி
திகட்டாத அமுதமூட்டி
துயரற்ற பாதையில் செலுத்தி
பால் போன்ற தூய்மையான
தாயவளின் பக்குவம் புலப்படுகிறதே...!

ஓயாமல் நீ அழுகின்ற வேளை
ஓடிவந்து அவள் அணைக்கின்ற காலை
தேயாது என் நெஞ்சில் - இன்றும்
தெளிவான ஓவியமாய் மிளர்கிறதே...!

ஊரவர் குழந்தைகள் யாவையும்
உன் குழந்தையாய் எண்ணி நித்தமும்
உடனிருக்க மனைதேடி - நீ
உத்தமமாய் நிதி தேடினாயே...!

திரட்டியது நிதி மட்டுமா அன்னையே...?
தெளிவாய் ஓர் செல்வந்தரின்
தேடிச் சென்ற வாசலிலே - உன்
கைகளை எச்சில் படுத்தியபோதும் - நீ
கொள்கை மாறாமல் கேட்ட விதம் - எனை
கொள்ளை கொள்ளச் செய்யுதம்மா...!

அகிலத்தில் ஒவ்வோர் குழந்தைக்கும்
அன்பான ஓர் தாயவள் இருப்பாள்...!
ஆண்டுகள் பல கழிந்தும் - நீ
அகிலத்திற்கே தாயானதன் மாயமென்னவோ..?

எழுதியவர் : கவியறியாக் குழந்தை (10-Sep-12, 6:20 am)
சேர்த்தது : Pirathee Billa
பார்வை : 108

மேலே