ஒரு சிறிய காதல் கதை...

"இன்று என் முதலாவது திருமண நாள். நம்ம திருமண நாளை செலிபரேட் பண்ணுறதற்காக என் நண்பர்கள், சொந்தகாரங்க்க எல்லாரேயும் கூப்பிட்டு யிருக்கிறேன். ஆனால் யாரும் வர மாட்டாங்ககிறது எனக்கு தெரியும்.

என்னைப் பாக்கிறவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி லூசு, சைக்கோ-னு சொல்லுறாங்க. இதை எல்லாம் கேட்கிறப்போ...
கேட்கிறப்போ, அழுது உன் முன்னாடி வந்து உட்காந்து விடுகிறேன் டா...
இன்னும் சிலர் பார்த்தீங்கன்னா 'இவ்வளவு பாசமான உன்னோட வாழ அவளுக்கு கொடுத்து வைக்கலியேடா' ன்னு சொல்லுறாங்க. அவங்க அப்படி சொல்லுறப்ப என் மனசில தோணுறது என்ன தெரியுமா?!
'நான் உன் மேல இவ்வளவு பாசமா இருக்கேன்னா, நீ என் மேல எவ்வளவு பாசமா இருந்திருப்பேன்னு'

***என் லட்சிய கனவுகளுடன்
தன் குஞ்சுகளை வாயில்
பாதுகாக்கும் வானம்பாடியடி நீ எனக்கு!!!***

நினைவுகளோட வாழ்றவங்கதான் பழசையெல்லாம் நெனச்சிட்டு இருப்பாங்க. ஆனா நான் நிழலோட வாழ்ந்திட்டு இருக்கிறேன். உன் நிழலோட டா...
நான் எப்படி எல்லாம் இருக்கணும் நீ சொல்லிறுக்கிறியோ, இது வரைக்கும் அப்படித்தான் இருக்கிறேன். இனிமேலும்...
உன் நிழல தவிர எதுவும் எனக்கு வேண்டாம். நீ விட்டு போன சுவடுல நடந்தாலே நான் ரொம்ப தூரம் போகலாம். கண்டிப்பா தடம் புரளாம உன் நிழலியே நடப்பேன்டா..."

மனதிற்குள் இதை சொல்லி முடிக்கும் பொழுது விஜய் கண்ணிலிருந்து நீர் கரைந்து ஓடியது. கலங்க்கிய கண்களோடு சுவரில் சாய்ந்த வண்ணம் எதிரே இருந்த தனது திருமண புகைப்படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தான் விஜய்.
அறையை சுற்றி எங்கும் பூக்கள் மற்றும் சாம்ராணி வாசனை. இவன் மனது மட்டும் குமுறி குமுறி அழுது கொண்டிருந்தது. கூட அழ ஒருவருமில்லை என்பதுதான் கொடுமை
ஐஸ் பெட்டிக்குள் சில நாட்கள் வைத்திருந்த ஒரு பெண்ணின் உடலில் கையை பிடித்து அவள் விரலில் திருமண மோதிரத்தை விஜய் அணிவிப்பது போல் அமைந்திருந்தது அந்த புகைப்படம். இதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த விஜயின் கண்கள் வழியாக அந்த புகைப்படம் விரிகிறது...

***இயேசுவை போல் சிலுவையில்
அறையுங்கள் என்றேன்
காலவன் என் கன்னத்தில்
திருப்பி அறைந்தான்...***

அழகான சாலை, இரு புறமும் மரங்கள் படர்ந்து மலர்கள் சாலையில் விழுந்தும் காலை வேளை. யாருமற்ற அமைதியான அந்த சாலையில் விஜயும் அவன் காதலியும் கைக் கோர்த்து பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தனர்.

" காலேஜ் டேய்ஸ்-ல உனக்கு ஞாபகமிருக்கா? நான் யாருக்கிட்டேயும் பேசாம, எப்போதும் கிரிக்கெட், பிரண்ட்ஸ் சுத்திட்டு இருந்த நேரத்துல நீ என்ன லவ் பண்ணுறேன்னு அறிமுகமான. நான் பதிலே பேசாம போய்யிட்டேன். துரத்தின, நான் திட்டினேன், நீ கொஞ்சம் கூட வருத்தப்படல. கேட்டதற்கு சொன்ன, 'என் லவ்' அப்படின்னு சொல்லிட்டு சிரிச்ச. அந்த சிரிப்பில விழுந்தவன்தான் இன்னும் நான் எந்திருக்கவே இல்ல. நான் எங்க போனாலும் என் பின்னாலே வருவா. நானும் உன்ன ஏத்துகிட்ட போது நீ சொன்னாய் 'இனி பாருடா பாசம்னா என்னானு காட்ட போறேன் உனக்குன்னு, உலகம்னா என்னான்னு சுத்தி காட்டுறேன் வா' என்று சொல்லிட்டு என் கை புடிச்சவதான் நீ . அதுக்கப்புறம் ஒரு நாள் கூட நான் தனியா இருந்தது இல்ல. இப்படியும் ஒரு வாழ்கை இருந்திருக்கேன்னு ஆச்சிரியப்பட்ட நாள் அது. மொத்தத்தில நீ இல்லாம ஒரு நொடி கூட என்னால இருக்க முடியாதுங்கிற நிலமைக்கு என்னை கொண்டு போயிட்ட. அந்த வருடங்கள் கனவில ஒரு கவிதை போல போயிடுச்சு."

***என் கல்லூரி காலம்
வகுப்பறையில் ஒரு தாஞ்மஹால்
வராண்டாவில் ஒரு மஹால்
மைதானத்தில் ஒரு மஹால்
நீ எங்கெல்லாம் சென்றாயோ அங்கெல்லாம்
கட்டி குவித்தேன் - என்
காதல் சின்னங்களை!!!***

"நீ வேலைக்கு போயி எனக்கு வேலை வாங்கி தந்தாய், எனக்கு எல்லாம இருந்தாய். இனி கல்யாணம் பண்ணிக்கலாம்னு நம்ம காதல நம்ம வீட்டில சொன்னோம். அதுக்கப்புறம் எத்தனை போராட்டம், எத்தனை சண்டை. நினைத்தாலே ஆச்சரியமா இருக்கு எனக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்திச்சு..."

"நீ மட்டும் இவ்வளவு தெளிவா இல்லைனா நம்ம அப்பா,அம்மா காதலுக்கு பச்ச கொடி காட்டியிருக்க மாட்டாங்க. அவங்க ஓகே சொன்னதும் உன் முகத்தை பார்த்த நான் வியந்து நின்னேன்டா" இவ்வளவு ஒரு மலர்ச்சி இதுக்கு முன்னாடி உன் முகத்தில நான் பார்த்ததில்லைடா. அந்த அளவிற்கு என்ன புடிக்குமாடா உனக்கு?

***என் மனதும் என் உயிரும்
எங்குள்ளதென்று எனக்கு தெறியாது
ஆனால் இரண்டிலும் நீதான் நிரம்பி வழிகிறாய்***

" நாம எவ்வளவு பேசுவோம். நீ சொல்லிவியே 'விஜய் நீ வயசானாலும் எப்பவும் இப்படியே இருக்கணும் ட்ரிமா, னீற்ற டிரஸ் பண்ணி, எங்க போனாலும் சுற்றி இருக்கிறவங்கள விட பெஸ்ட இருக்கணும். நீ, நான், நம்ம அப்பா, அம்மா அவங்களோட சந்தோசமா இருக்கிறத பார்த்து எல்லாரும் பொறாமை படணும்டா.

"நீ ஆசப்படுவியே நமக்கு முதல்ல பொறக்கிறது இரட்டை குழந்தையா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்னு. கடைசி 6 வருஷத்தில ஒரு நாளாவது எனக்கு குட் மார்னிங் சொல்லாம உனக்கு பொழுது விடிஞ்சிருக்கா!, ஒரு நாளாவது சாப்பிட்டியான்னு கேக்காமா நீ சாப்பிட்டிருக்கிறியா அந்த எமன் மட்டும் நம் வாழகையில வரலேன்னா, எப்பாடு பட்டாவது நீ ஆசப்பட்டது எல்லாம் பண்ணிருப்பேன் டா"

***எமனுக்கும் எனக்கும் பகை
யார் பாசக் கயிறு வலுவானது என்று
எம் கயிறு சிறியது என்று
சொல்லி சொல்லி எமனை என்னிடம்
மண்டியிட வைத்துவிட்டாய் என் காதலே...***

அன்று ஏன் உன்னை பார்க்க வேண்டுமென்று அழைத்தேன். எதுக்கு அந்த ரோட்டில நாம போனோம். அந்த காட்சிய இப்ப நெனச்சாலும் நெஞ்சு பதறுது டா.

"ஐயோயோ.."

அந்த சாலை வழியாக விஜயும் அவன் காதலியும் நடந்து கொண்டிருந்தனர்.

சாலை முடியும் இடத்தில் ஒரு 'T' வளைவு. அந்த இடத்தை அவர்கள் அடையும் நேரம், விஜயின் காதலி கையில் இருந்த பர்ஸ் தவறி முன்னால் விழுந்தது.
அதை குனிந்து எடுக்க முயல, அந்த கொடூர காட்சி நிறைவேறியது. இவர் வருவது தெரியாமல் வந்த ஒரு வண்டி இவன் தலையில் வேகமாக உரசி சென்றது. சுருண்டு விழுந்தாள் அந்த இடத்திலே அவள் உயிர் இமைக்கும் நேரத்தில் விஜய் மடியில் அவள் பிரிந்தது.
கல்யாணத்திற்கு மூன்று நாட்களே இருந்த நிலையில் இந்த சம்பவம் விஜயை ரொம்ப பாதித்தது. அவள் இறந்தாள் என்பதை அவன் நம்பமுடியவில்லை.

"என் உயிர் இவள். இவளை இப்படியே புதைக்க அனுமதிக்க மாட்டேன். என் மனைவியாகத்தான் இவள் சொர்க்கம் செல்ல வேண்டும். யார் என்ன சொன்னாலும் என் முடிவில் மாற்றமில்லை"

***வெற்றி பெற்றது யார்?
எமனா நானா?
எமனே இதற்கு வருந்துவாய்
அவள் பாசத்தால் உன்னையும் தோர்க்கடிப்பாள்...***

அவள் இறந்த செய்தியை விஜய் யாரிடமும் அவன் சொல்லவில்லை. எதிர்பார்த்தபடி திருமண நாள் வரவே, வந்தவர்கள் ஆச்சரியமும் வருத்தமும் கலந்து பார்த்தனர். விஜய் தன் எண்ணத்திலிருந்து மாறுவதாக இல்லை. பாதிரியார் ஜெபங்கள் செய்ய திருமணத்திற்கு தாயாரானான் விஜய். திருமண மோதிரத்தை அணிவிக்க கூறி கையில் கொடுத்தனர். அவள் படுத்திருக்கும் பெட்டியின் கண்ணாடி கதவுகள் திறந்தனர்.
உடல் அழுகி வந்த நாற்றம் அறை முழுவதும் பரவ, சுற்றியிருந்த அனைவரும் மூக்கை மூடி அழுத காட்சி பார்ப்பவர்கள் மனதை கண்டிப்பாக உருக்கும்.

***என் திருமண கோலம்
எல்லாரை அழ வைப்பதை பார்!
பூக்கள் அழுகி நாறுகிறதாம்
உனக்கு இப்படியும் ஒரு வாசம்...***

விஜய் அவள் கையை எடுத்து விரலில் மோதிரத்தை அணுவித்தான். இதை பார்த்துக் கொண்டிருந்த கேமராக்கள் அதை கிளிக் செய்தது. அந்த புகைப்படத்தைதான் விஜய் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். கண்கள் அழுது கலங்கி உறைந்திருந்தது. கண்களை துடத்து விட்டு எழுந்து நடந்தான். மீண்டும் அதே சாலை, ஆனால் கை கோர்க்கதான் கைகளில்லை. ஆனால் அவள் தடங்கள் இருந்தது. அதன் மேல் நடந்தான். மலர்கள் பொழிந்தன வானம்.

"அன்பே . . உன் நிழல்தான் என்னுடன் நடக்கிறது. அதன் சுவட்டிலேயே நடக்கிறேன் நான். என் செல்வமே இன்று உனக்கு பிரசவ நாள். நமக்கு இரட்டைகுழந்தைகள் பிறக்க போகிறது. நான் அனாதை விடுதிக்குதான் சென்று கொண்டிருக்கிறேன்."

நீண்ட அமைதியுடன் சாலை நீள அவள் நிழல் சுவடுகள் அவனுக்கு வழி காட்டியது.

***"எல்லையில் எனக்கும் ஒரு சின்னம்
எழுப்புங்கள் - அதில்
இதுவும் காதல்தான் என்று எழுதுங்கள்"***

--ஜெயன் எம். ஆர்

எழுதியவர் : --ஜெயன் எம். ஆர் (11-Sep-12, 2:08 pm)
பார்வை : 5171

மேலே