தோல்விகளைத் தோற்கடிப்போம் !

தோல்வியைக் கண்டு
துவண்டு விடாதே தோழனே !
துணிவுடன் எதிர்த்து நின்றால்
தோல்வி துவண்டு விடும்
வெற்றி பாதை விடும் !

தத்தி நடக்கும்
சின்னக் குழந்தை
தடுக்கி பலமுறை
தரையில் வீழ்ந்தும்
கத்தி அழுது கைவிடுவதில்லை
முயற்சியை !
பற்றி பிடித்து மெல்ல நடந்து
வெற்றி களிப்பில் சிரித்து மகிழும்!

செல்லும் வழியில்
தடைகள் இருந்தும்
வழியை மாற்றி விரைந்து சென்று
முடிவில் கடல் என்னும்
இலக்கை அடையும் நதிகள் !

தோல்விகளின் வேதனைகளை
அனுபவித்த பின்னால் தான்
வெற்றிக் கனிகளைப்
பறித்தார்கள் விஞ்ஞானிகள் அன்று !


இன்றைய தோல்வி தான்
நாளைய வெற்றிக்கு வித்திடும் !
தோல்வியின் வேதனைகள் தான்
சாதனைகள் சாதிக்க ஊக்குவிக்கும் !

ஆகவே

தோல்வியைக் கண்டு
துவண்டு விடாதே தோழனே !
துணிவுடன் எதிர்த்து நின்றால்
தோல்வி துவண்டு விடும் !
வெற்றி பாதை விடும் !

எழுதியவர் : சிவமைந்தன்,சென்னை (12-Sep-12, 7:38 pm)
பார்வை : 180

மேலே