[326 ] குறு குறுப் பாக்கள் (5 )
"சீவச் சீவத்
தலையைக்
கொடுத்துக் கொண்டே இருக்கிறது
’பென்சில்’
ஜனநாயக நாட்டின்
மக்களும் அப்படித்தானோ?
--
ஏதோ ஒரு வார்த்தையை
எதிர்பார்த்தபடி
நீயும் நானும்
எதிர் எதிரே இருக்கிறோம்!
நீதிமன்றமே!
எப்பொழுது வாய்திறப்பாய்
எனக்கெதிரான கொடுமைகளை
எதிர்த்து?
----
உயரங்களிலிருந்து
இப்பொழுதுதான் விழுந்தோம்!
விலைவாசிக் காற்று
மீண்டும் நகர்த்திக் கொண்டே
எழும்புகிறதே..
மருந்திடுமோ?
மயக்கிடுமோ?
கவிழ்த்திடுமோ
மீண்டும்..
--
மனித மாசுக்களை
மறுபடியும் மறுமடியும்.. ..
எவ்வளவுதான் தின்பேன்?
எப்படிநான் செரிப்பேன்?
அலைகளின் பேரிரைச்சல்
அஜீரணச் சப்தமாய்..!
-- --
மணல்வீடு
வசிக்கிறதுதான்
குழந்தையின்
கனவுகளில்..
மகிழ்வான வீடு
வசிக்கிறதா
மக்களின்
கனவுகளில்..?"
--