உண்டி சுருக்குவோம்...

மிகையுண்டு களிப்புற்று
மிருகங்களாய் சில காலம்,
பழுதொன்று வருகையிலே
பட்டினியும்,பத்தியமும்.
இவையெண்ணிப் பார்க்கையிலே
நாமெல்லாம் பைத்தியமே?
பசி கொண்டு உயிர் துறக்கும்
பாலர்கள்,
பிழைப்பின்றி எச்சிலிலே
பசியாறும் மனிதர்கள்,
எத்தனையோ?எத்தனையோ?எத்தனையோ?
மிஞ்சுகின்ற உணவுதானும்
செலுத்திடினும்
தேற்றிடலாம் ஒன்றிரண்டு
உயிர்களையே!
கைகோர்த்து நாமும் குரல்கொடுத்தால்,
கைங்கரியம் செய்திடலாம் கடவுளுக்கே.....
உண்டி பெருக்கி
தொந்தி வளர்க்கும்
அரக்கர் வாழ்வு துறப்போம்,
பகிர்ந்து உண்டு பசியைவிரட்டும்
புதிய வழியை திறப்போம்...