போய் வா நண்பா ...!!

இதொன்றும் தொப்புள்கொடி உறவில்லையே- நண்பா
நான் மனமுடைய..! கலங்கமாட்டேன் போய் வா
பிரிவுகளொன்றும் புதிதில்லை எனக்கு- இருந்தும்
சின்ன வருத்தம் தான் இருக்கு..!!

நான் நெருங்கிய நட்பெல்லாம் வயதில் சிறிது- இருந்தும்
என் மீது கொண்ட அன்பில் பெரிதென நானறிவேன்
என் வார்த்தை சரியோ பிழையோ - விளக்கம் தேடாமல்
நீ செய்ததையும் நான் உணர்வேன் தோழா..!!

நாமிருந்த dine more கடற்கரை- மனம்விட்டு பேசிய
37lane flat, விடியற்காலை போன கட்டடி
தண்ணியுடன் ஒரு கிழமை சூரியன் பாராமல்- தனியாக
நாம் செய்து முடித்த நான்கு ஒப்படை..!!

நாம் தூங்கிய விடுதி அறை- ஒன்றாகப்போன
world end சுற்றுலா, தொலைந்து மீண்டுவந்த
கந்தானை மலைத்தொடர்- எல்லாமே
என்றும் பசுமையாக என் மனதில் வீசும்..!!

என்றோ ஒரு நாள் நம் சந்திப்பின் ஆயுளை - நம் ஆயுள்
முந்தாமல் இருந்தால் அன்று சந்திப்போம் - இல்லை
விதி முந்திக்கொண்டால்!! உயிர் உடலை விட்டு போகமுன் ஒரு கணமேனும் உன்னை நானும்
என்னை நீயும் நினைத்துக்கொள்வோம்..!!
மறுபிறப்பென்றிருந்தால் இறைவனைக்கேட்போம்
இப்படியே இருக்கட்டும் என்று...!!

எழுதியவர் : நிது (17-Sep-12, 12:18 pm)
பார்வை : 477

மேலே