வகுப்பறை !!

புத்தகம் !!
```````````````
செவியைத் தீண்டிடும் சொற்கள் யாவும்
ஓவிய னாக்கிடும் வெள்ளைத் தாளில் !!

மேசை !!
``````````````
பாடம் எல்லாம் தாலாட் டானதால்
கனவுகள் சுமக்கும் ஆடாத் தொட்டில் !!

சுண்ணக்கட்டி !!
````````````````````````
ஓவியம் பலவும் வரைந்து விட்டு
உடனே உயிர்விடும் ஒற்றைக் காலன் !!

கரும்பலகை !!
``````````````````````
கற்றது பலநூறு கையளவு எனினும்
கொஞ்சமே கற்பிக்கும் பெரிய கருமி !!

எழுதியவர் : கார்த்திக்.எம்.ஆர் (16-Sep-12, 8:30 pm)
பார்வை : 491

மேலே