எங்கே திராவிடம் யார் திராவிடர்கள் பகுதி 2

என் பழைய பதிப்பில் எழுத்து பிழைகள் இருந்தன அதை முடிந்தவரை திருத்தியும் அதன் தொடர்ச்சியும் இங்கே பதிவு செய்கிறேன்
எங்கே திராவிடம் யார் திராவிடர்கள் என்ற தலைப்பில் ஏன் கட்டுரை எழுத வேண்டும் என்று என்னை யாரேனும் கேட்க கூடும் இல்லாத ஒன்றை சொல்லி நம்மை ஏமாற்றி வருபவர்களின் முகத்திரயை கிழிக்க
திராவிடத்தின் எல்லைகள் என்று வடக்கே நர்மதை ஆறு குறிக்கபடுகிறது நர்மதைக்கு கீழ் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, கேரளா மட்டும் தமிழ் நாடு இந்த மாநிலங்கலில் தமிழ் நாட்டைத்தவிர திராவிடம் என்ற சொல்லும் திராவிட கட்சிகளும் இல்லை அப்படி என்றால் தமிழ்நாட்டில் திராவிடம் இருக்கிறது என்று அர்த்தமா இல்லை தமிழ் நாட்டில் திராவிட மோகம் உள்ளது
திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் புகுத்தியது வந்தேறி கால்டுவேல்ஸ் தான் கால்டுவேல்ஸ் தற்போது உள்ள இந்தியாவை இரண்டாக பிரிக்க செய்த சதி தான் ஆரியம் திராவிடம், ஆரியம் திராவிடம், என்று இரண்டு இனங்கள் இருந்ததற்கு எந்தவித சரித்திர சான்றும் இல்லை சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய படையெடுப்பால் அழியவில்லை இயற்கை சூழ்நிலையால் தான் ஆழிந்ததற்கு சான்று கிடைத்துள்ளது
வந்தேறி காடுவேல்ஸ் புகுத்திய திராவிடம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எஞ்சி இருக்கிறது என்றால் தமிழ்நாட்டை தமிழன் அல்லாத திராவிடர்கள் என்று சொல்லிகொள்ளும் திராவிடத்தலைவர்கள் ஆள்வதற்காக செய்த சதி
திராவிடகட்சிகளின் தமிழ் நாட்டை ஆண்ட முதலவர்கள் அண்ணாதுரையும் பன்னீர் செல்வத்தையும் தவிர பச்சை தமிழன் எவரும் இல்லை அவர்களும் சொற்ப காலமே ஆட்சி செய்தார்கள் மேலும் திராவிட எல்லைக்குல் என்று சொல்லிகொள்ளும் எந்தமாநிலத்திலும் தமிழனை முதல்வராக்கமாட்டர்கள் ஆனால் தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்று சொல்லிகொள்ளும் யாரை வேண்டுமானாலும் மக்கள் முதல்வராக ஆக்குவார்கள்
இதுதான் சதி எடுத்துகாட்டாக ஒன்றை சொல்லுகிறேன் 1921 ம் ஆண்டு திராவிடத்தை தொடங்கிய முதல் கட்சியான நீதி கட்சின் சென்னை மகாண அமைச்சரவை கூட்டத்தில் தாழ்த்த பட்ட மக்களை எல்லாம் ஆதி திராவிடர் என்று அழைப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆனால் கன்னடர்களும் தெலுங்கர்களும் அதை மாற்றி தங்கள் மொழி பேசுபவர்களை ஆதிகன்னடர், ஆதி தெலுங்கர் என்று தீர்மானத்தை மாற்றி விட்டார்கள் அப்போதே தமிழ் தலைவர்களை தவிர யாரும் திராவிடத்தை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை
இதில் என்ன சதி என்றால் நாம் இன்னும் ஆதி திராவிடர் என்ற பட்டியலில் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கொண்டு இருக்கிறோம் வந்தேறி கால்டுவேல்ஸ், கால்டுவேல்ஸ் ஏன் வந்தேறி என்று சொல்லுகிறேன் என்றால் சிந்து சமவெளி நாகரிகத்தின் பொது இந்தியாவிற்கு வந்தவர்கள் என்று காடுவேல்ஸ் அவர்களால் சொல்லப்படும் பார்பனர்களை வந்தேறிகள் என்று சொல்லும் திராவிடத்தலைவர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த இஸ்லாமியர்களையும் வியபாரம் நடத்த வந்து நாட்டை பிடித்த கிருஸ்துவர்களும் வந்தேறிகள் தான்

எழுதியவர் : செ.ரூபன் (18-Sep-12, 1:12 pm)
பார்வை : 705

சிறந்த கட்டுரைகள்

மேலே