பிரபஞ்சம் உன் காலடியில்....!
பதுங்கிக் குள்ள நரியாய்
பயந்து சாகாது மனமே....
பட்டாம் பூச்சியாக
பறந்தே மகிழ்ந்து செல்...
சுற்றுலா என்றொரு
சொற்றொடர் தமிழில் உண்டு
கற்பனை என்பதற்கு
கால்களை முளைக்க வை
காசு பணம் தேவை இல்லை
கடல் மீது நடக்க வை
இதோ.....
பிரபஞ்சம் உன் காலடியில்....!