அரவாணியின் கதை!!!
எங்கள் வாழ்வு காகம் போட்ட விதை!
இது மரமாகுமா, இல்லை மரணமாகுமா
என்பதே எங்கள் வாழ்நிலை!
நாங்கள் நிலமும் அல்ல
கடலும் அல்ல
கடற்கரையாகினோம்!
நாங்கள் கடலும் சேர்வதில்லை
நிலமும் சேர்வதில்லை
நடுவே தனிமை காண்கின்றோம்!
எங்கள் பிறப்பே இறப்பை போல சோகம்!
எங்கள் வாழ்நாள் ஒவ்வொன்றும்
இயேசு சுமந்த சிலுவையாகும்!
ஆயிரம் சூரியன் வந்தாலும்
எங்கள் வீடு அஸ்தமனம்தான்!
ஏனோ செய்தான் ஆண்டவன்
எங்களுக்கு மட்டும் ஓரவஞ்சனைதான்!
யார் விட்டாலும் சாபம், கடல் வற்றிபோகாது!
போதும் இந்த வாழ்வே!
எங்கள் கண்ணீர் மட்டம் என்றும் குறையாது!
நாங்கள் கடை தெருக்களில்
கை ஏந்துகிறோம்! காசுக்காக
காம வேலைகளும் செய்கின்றோம்
இது பொழுபோக்கிற்கு அல்ல!
எங்கள்
ஒரு நாள்
பொழுதை
போக்குவதற்கே!
எங்கள் வயிற்று பசியை போக்க
பிறர் உடலுக்கு உணவாகிறோம்!
வருத்தம் நிறைய உண்டு!
உயிர் வாழவேண்டுமே
எதை உண்டு?
நாங்களும் மனித குலம்தான்
முகம் கணியுங்கள்!
மாறாய், முகம் சுளிக்காதிர்!
நாங்கள் மனித கழுவுகளில்லை!