தடுமாற்றம்
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு. குறள் 1259
காணாதது போல்
காதலனை ஊடலால்
கண்டபடி
வதைக்க நினைத்தேன்
அவனை கண்டவுடன்
அனிச்சையாக - நெஞ்ச(ம்)
அணைக்க
ஆரத் தழுவினேன்