பெண் ...

அவசரமாய் காய் நறுக்கையில் ..

குழந்தைக்கு உணவூட்டும் போதினில்

தலையனைக்கு உறை போடுகையில்

கணவருக்கு உணவு பரிமாறுகையில்

என -எழுத முடியா வேளையிலெல்லாம்

எண்ணற்ற கற்பனைகள்

உள்ளுக்குள் அடித்தோயும்..

அத்தனையும் விட்டு விட்டு

பேனாவை எடுத்துக்கொள்ள

ஆண்களை போல் பெண்களுக்கு

முடிகிறதா இப்போதும்?

எழுதியவர் : சுப ஜோதி (20-Sep-12, 7:33 pm)
Tanglish : pen
பார்வை : 155

மேலே