மாவீரருக்கு சமர்ப்பணம்
மரணத்தை வென்று நின்று
எழுந்து பறக்கும் பீனிக்ஸாக,
விதைக்கப்பட்ட நீங்களோ
விழுதுகள் பல பதித்து
பழுதுகள் பல விரட்ட
விருட்சங்களாக இன்று ....
காட்சிப்புலன் காண மறுத்தாலும்
உணர்வுப் பக்கங்கள் ஒரு போதும்
உணர மறப்பதில்லை
வீரத்தமிழர்களை...
உடலை மண்தின்பினும்,
உணர்வுகள் விண்ணின்று
ஒலிக்கும்,
உறவுகள் உன் வழி
தேடி நடக்கும்,
தமிழன் தலை உயர்த்தும்,
வெற்றித்தேனில் தாகம் தீர்க்கும்,
வெறியர்களை குதறிக் கடிக்கும்,
வீர வரலாறு படைக்கும்,
பாதங்களில் காணிக்கையாக்கும்...