பாடல் இதுதானா

ஆண் :உன் தேசம் தேடி வந்தேன்
உன் நினைவில் வாடி நின்றேன்
கண்ணான காதல் தேவி என்
வாசல் வந்து செல்லலையே
நீ சொன்ன வார்த்தைஜாலம்
என் மனதில் வரைந்த கோலம்
கண் முன்னே அழியும் நேரம்
என் ஜீவன் மீண்டும் வாழ தோணலையே
பெண் :கண் மூடி மயங்கி நின்றேன்
கண்ணா உன் அருகில் நின்றேன்
என் ஜீவன் வாழும் காலம
உன் மடியில் வாழ்ந்தே போகும்
நம் காதல் இனிதே கூட
முப்பது மாதமாகும்
உன் காதல் நிஜமே என்றால்
வழிமேலே விழியை வைத்து
எனக்காக காத்து இரு
ஆண் :என் காதல் நீதானம்மா
என் வாழ்வும் நீதானம்மா
மூன்று பத்து மாதமென்ன
ஏழு ஜென்மம் காத்திருப்பேன்
என் தேவி வாராவிட்டால்
என் உயிரை நான் துறப்பேன்
பெண்:உன் காதல் நான்தானையா
உன் வாழ்வும் நான்தானையா
உன் மார்பில் தலையை சாய்க்க
என் உசிரு துடிக்குதையா
உன்னை நான் சேராவிட்டால்
என் உயிரை நான் துறப்பேன்