வாகை சூட வா

வெற்றியின் சின்னம் வாகை
வரைவியலின் சின்னம் பாகை
வேட்பாளரின் சின்னம் தோகை
வென்றிடுவது யார் கை ?

வாருங்கள் ஓட்டுப் போடுங்கள்
கொடுங்கள் ஏட்டில் கொள்கைகள்
ஓடாத நதிக்கு ஒப்பனைகள் எதற்கு
தீ ராத நதிக்கு தாகங்கள் எதற்கு

மூளையில் முட்டும் தடைகளை
உடைப்பவனுக்கு ஓட்டு
ஏழையின் கையில் இருக்கும்
ஆயுதம் தான் வாக்குச்சீட்டு

ஒரு சிறு மை துளி
மாற்றும் பல முகத்துளியை...

முடிசூடலாம்
மன்னனுக்கான கடமையை நீ செய்தால்.
வாகைசூடலாம்
மக்களுக்கான கடமையை நீ செய்தால் .

எழுதியவர் : சுகந்த் (21-Sep-12, 1:59 pm)
பார்வை : 196

மேலே