தலைப்பு
தலைப்பு கொடுத்துவிட்டு
சில கவிதைகள் எழுதுகிறேன்
சில கவிதைகளை எழுதிவிட்டு
தலைப்பு கொடுக்கிறேன்
தலைப்புக்கு ஒரு கவிதை
எழுத யோசித்து
தலைப்பாக தலைப்பு கொடுத்துவிட்டு
எழுத உட்கார்ந்தேன்
எடுத்துக்கொண்ட தலைப்பின்
கருவாக உருவானது
இந்த கவிதை ....!!!