"நண்பனுக்காக"
நான் செல்லும் பாதை எல்லாம்....
சரி என்று நினைத்துருந்தேன்!
நீ இருக்கும் வரை....
புயல் அடித்தால்..
தூணாய் நின்றாய்.!
மழை பெய்தால்..
குடையாய் இருந்தாய்!
எனக்காய்..
தோள் கொடுத்தாய்....
வாள் எடுத்தாய்...
தோல்வியிலும்...வேள்வியிலும்...
அரணாய் நின்றாய்...
நண்பா.......
நீ இல்லாத இன்றுதான் புரிகிறது...
நான் சென்ற பாதை எல்லாம்
சரியோ ? தவறோ?...
ஆனால் அவை உன்னால் சரியானதாக்கப்படிருக்கிறது என்று!
எதிபார்ப்பு இல்லாததுதான் நட்பு....
இருந்தாலும் இன்றும் கூட!
உன்னைத்தானே எதிர்பார்க்கிறது மனம்!
ஓ..... அதன் பெயர்தானே "நட்பு"