சிகரத்தின் நட்பு

சிகரத்திடம் கேட்டேன் - உன் நட்பை
சிகரமே சிதைந்தது உன்னால் சிறு துகளாக...

சுட்டெரிக்கும் சூரியனிடம் கேட்டேன் - உன் நட்பை
உறைந்தது உதய சூரியன் உருகும் பனியாக...

உறைந்து இருக்கும் தெய்வத்திடம் கேட்டேன் - உன் நட்பை
உயிர்த்து எழுந்தது உன்னால்

இவை அனைத்தும் மாறின
நட்பு எனும் சொல்லால்..

எனையும் நீ என் மாற்றினாய்-
வஞ்ஜகம் இல்ல உன் சொல்லால்....

எழுதியவர் : தல தீனா (22-Sep-12, 2:52 pm)
சேர்த்தது : dheenadhayalan
பார்வை : 373

மேலே