கல்லூரி காலம்

நான் பார்த்து ரசித்த பட்டாம்பூச்சி..
ஆம்!
நான் பார்த்து ரசித்த பட்டாம்பூச்சி
என் கல்லூரி காலம்..
வண்ண வண்ணமாய் பல பூக்கள்
என் நட்பு தோட்டத்திலே..
இன்பமாய் தேனெடுத்து உளவியது,
நான் பார்த்து ரசித்த பட்டாம்பூச்சி..
மணம் வீசும் பல கேலிபேச்சி,
சிறுசிறு ஊடல்கள், சிந்திக்கதூண்டும்
செயல்பாடுகள்-அதில் இன்பமாய் சிறகடித்தது
நான் பார்த்து ரசித்த பட்டாம்பூச்சி..
உற்சாகமாய் உலவிய காலமது..
உன்னதமான பல கனவுகளிலே
தோட்டத்தை விட்டு புறப்பட்டது
பூக்கள் எல்லாம்.
வாழ்க்கை சக்கரம் சுலண்டதிலே
வண்ணத்தை நாளும் தேடுகிறேன்
நாலும் அதன் நினைவினிலே
இனிதாய் இன்னும் தேடுகிறேன்
நான் பார்த்து ரசித்த பட்டாம்பூச்சி
என் கல்லூரி காலம்..