அம்மா எனும் தேவதை - அவள் பெயர் ரங்கநாயகி -1

1.கடவுள்
கூட
இணையில்லை
அம்மா
என்ற
இந்த
வார்த்தைக்கு

2.என்
குல
தெய்வம்
அம்மா
அந்த
குல
தெய்வத்தின்
பெயர்
ரங்கநாயகி

3.அழகான
பெண்
யாருமே
இல்லை
அம்மாவை
விட

4.ஒரு
சொல்
தெய்வம்
ஒரு
சொல்
கவசம்
ஒரு
சொல்
அன்பு
அம்மா

5.எந்த நெஞ்சில்
அம்மா
இருக்கின்றாளோ
உண்மையில்
அந்த
நெஞ்சம்
அழகாக
இருக்கும்

6.எவரையும்
மதிக்க
தயாராக
இல்லை
என்
அன்னையை
மதிக்காத
எவரையும்!

7.வானமும்
நிலவும்
எப்பொதும்
போல்தான்
இருக்கின்றன
ஆனால்
இன்று
எவ்வளவு
அழகாக
இருக்கிறது
இடுப்பில்
என்னை
ஏற்றிவைத்து நீ
அமுதூட்டும்போது

8.நெய்
சோறு
அதைவிடவும்
சுவையானது
அம்மாவின்
கைசோறு

9அமிர்தம்
சாப்பிட்டிருக்கிறேன்
அது
அன்னையின்
கைச்சோறு

10.சீக்கிரம்
திரும்பி வா
அம்மா
எப்போது
வருவாய்
என்று
எட்டி எட்டி
பார்த்து
கழுத்து
வலிக்கிறது

11.ஜெபிக்கும்
மூல மந்திரத்தை
வெளியில்
சொல்லக்கூடாதாம்
நான்
சொல்கிறேன்
அது
அம்மா
அம்மா
அம்மா
கவிதைக்காக
அல்ல
சத்தியத்தில்

12.ஆவியாய்
அலைவாய்
அம்மாவிற்கு
முன்
நீ தானாகவே
உயிரை
மாய்த்துக்கொண்டால்

13.மறக்க வேண்டாம்
ஈன்ற
தாயை
அற்ப
வாழ்வின்
சுக துக்கங்களுக்காக

14.அம்மா
எங்கு
போவதாக
இருந்தாலும்
கூடவே
என்னையும்
அழைத்து
போ
அது
இறந்து
போவதென்றாலும்

15.எப்படி
இருந்தாலும்
அவள்
என்
அம்மா!

16.அன்னையிலும்
சிறந்த
தெய்வம்
இல்லை
ஆதலால்தான்
சொல்கிறேன்


அம்மா
என்று
மட்டுமே ஜெபி

அம்மாவை
மட்டுமே
வலம் வா
அவளை
மட்டுமே
தியானம்
செய்
கண்கண்ட தெய்வம்
உன்
அம்மா!

17.உனக்காக
என்ன
செய்தேன்
அம்மா
நான்?

எனக்காக
பட்டினி
கிடந்த
உனக்கு
எனக்காக
பத்தியம்
இருந்த
உனக்கு
எனக்காக கண் அயராத உனக்கு
எனக்காக கண்ணீர் சிந்திய உனக்கு

உனக்காக
என்ன
செய்தேன்
அம்மா
நான்?

18.திரும்ப
திரும்ப
இந்த
மன்ணில் பிறவி எடுக்க வேண்டி இருக்கும்
பெற்ற
அன்னையின்
வயிறு
குளிராமல்
போனால்

19.பூக்கள்
மட்டுமே தூவுங்கள்
அன்னையின்
பாதங்கள் செல்லும்
பாதைகளில்

20.தயவு செய்து
எந்த
அன்னையயும்
குற்றம் சொல்லாதீர்கள்
எந்த
மகன் செய்த
தவற்றுக்கும்

21.அம்மாக்கள்
எல்லோரும்
உயிரோடிருப்பார்களா?
கடவுளின்
கழுத்தை
நெரித்துவிட்டால்

22.ஆறு சுவை
தண்டி
ஏழாவது
எட்டாவது
ஒன்பதாவது
என
சுவை கூடிக்கொண்டே போகிறதே எப்படி?
அம்மா நீ
ஊட்டும் அமுத உணவிற்கு மட்டும்.

23.என்னை
கொன்று போட்டிருக்கலாமே
அம்மா
என்னை
நீ
விட்டிவிட்டு
போவதற்கு
பதிலாக

24.அநாதை
அம்மா இல்லாத
பிள்ளை

25.நானும்
உன்னோடு
வாழ முடியாது
அன்பே
நீ
என்
அன்னையுடன்
அன்போடிருக்க
முடியாத போது!

26.ஈடிணையில்லாத
ஒரு மந்திரம்
ஈடிணையில்லாத
ஒரு வார்த்தை
ஈடிணையில்லாத

ஒரு உலகம்
ஈடிணையில்லாத

ஒரு சொர்க்கம்
அம்மா
அம்மா
அம்மா!

27.உடனே
வந்து
உதவியதில்லை
எந்த
தெய்வமும்
அம்மா
உன்னை போல்

28.செருப்பாக
வரம்
வேண்டும்
இறைவா
என்
அம்மாவின்
காலடிக்கு!

29.என்
கைகளை
துண்டித்து விடுங்கள்
என் அம்மாவின்
கண்ணீரை துடைக்காத
கரங்கள் எனக்கெதற்கு?

30.எத்தனை நரகம்
எனக்காக
காத்திருக்கிறதோ தெரியாது
அம்மா!
உன் கண்ணில் கண்ணீரை
பார்த்த எனக்கு

31.என்ன
பாவம் செய்தாய்
அம்மா என்னை நீ மகனாக
பெறுவதற்கு?

32.அன்பே
உன்னை காதலிக்க
மணம் முடிக்க
சம்மதிப்பேன்
நீ என்
அன்னையை மதிப்பேன்
என்று சத்தியம்
செய்தால்

அன்பே
உன்னை காதலிக்க
மணம் முடிக்க
சம்மதிப்பேன் நீ
என் அன்னையாக இருப்பேன்
என்று சத்தியம் செய்தால்

33.ஆயுள்
100 வேண்டும்
அம்மா
உனக்கு
உன்
அன்பில்லாமல்
நான்
எங்கு
போவேன்
அம்மா?
என்ன ஆவேன்
அம்மா?

34.கடவுள் கூட
கிடையாதே
அம்மா
உனக்கீடான
உறவு!

35.தேவர்களே
கொஞ்சம்
அமிர்தம் இருந்தால்
தாருங்கள்
எப்போதும்
என்
அம்மா
சாகாமல்
வாழ்வதற்கு!

36.நான்
உனக்கு
அன்னையாக பிறக்க வேண்டும்
அம்மா
நீ காட்டிய
அன்பிற்கு
ஈடாக
அன்பு காட்ட!

37.யோசித்தும்
விடை கிடைக்கவில்லையே
அம்மா
அன்னமூட்டும்
உன் கைகளுக்கு
எதை
பெரிசாக
பரிசளிக்க?

37.காலம்
நேரம்
ஏது?
அம்மா
உன்
அன்பிற்கு!

38.உண்மையில்
கோவில்
கட்டவேடியது
நம்
அம்மாவிற்குத்தான்

39.ஏ
இறைவா
என்
தாய்
என்னைப்பற்றி
உன்னிடம்
முறையிடாத
வண்ணம்
எனக்கு
வாழ்வளிப்பாயாக!

40.அன்பு
என்றால்
அது
அம்மா!
41.அவள் அழகிய கவிதை
அவள் அழகியதேவதை
அவள் அழகிய கடவுள்
அவள் அழகிய உலகம்
அவள் அன்பின் பிறப்பிடம்
அவள் தான் அம்மா

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
-அன்புடன் R.P.OM

எழுதியவர் : -அன்புடன் R.P.OM (23-Sep-12, 9:33 am)
பார்வை : 299

மேலே