பிறந்தநாள் வாழ்த்து

குணத்தில் சிறந்தவன்
சிரிக்கவைத்தே சமூகத்தைச்
சுத்தம் செய்யலாமென
சகலரையும் கூப்பிட்டவன்!

சிந்திக்க வைப்பதில்
சார்லி சப்பிளினையும்
சாப்பிட்டவன்!

சிரிக்கத் தெரியாத
முகங்களில் கூட
சிரிப்பு விதையை நட்டவன்!

நையாண்டி என்னும்
நாட்டுத் துப்பாக்கியால்
மூடக் கருத்துக்களைச் சுட்டவன்!

இவனைப்போல இன்னும்…
நூறு மலர்கள் மலரட்டும்
நூறு வயதுவரை வாழட்டும்

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்க பல்லாண்டு ...

எழுதியவர் : ராம் பிரவீன் (26-Sep-12, 7:40 am)
பார்வை : 641

மேலே