எனக்கு நீ
கிளை தாங்கும் வேருக்கு மண்
கவி பாடும் தமிழுக்கு பண்
மணம் வீசும் முல்லைக்கு தேர்
உழுதூட்டும் வயலுக்கு ஏர்
மங்கையர் கண்ணனுக்கு குழல்
அவன் தாசன் கவியரசுக்கு பாடல்
கண் தூங்கும் இரவுக்கு நிலா
பண் உருட்டும் ஊருக்கு பலா
நீர் தேங்கும் பாசிக்கு பாறை
பாலூட்டும் பவுர்ணமிக்கு பிறை
பூத்தொடுத்த மாலைக்கு நார்
சிலம்பு ஓலிக்கும் இளங்கோவுக்கு சாத்தனார்
சங்கரன் தலை நனைக்கும் கங்கைக்கு நீர்
உன்னை தினம் நினைக்கும் எனக்கு நீ!.....