இந்தியாவில் இந்துக்கள்...

எனக்கு மத நம்பிக்கையோ, கடவுள் நம்பிக்கையோ இல்லை.
இருப்பினும் என் மனதில் தோன்றுவதை இங்கே தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு. ஆனால் இங்கே ஏறாழமானோர் தினமும் மதம் மாறுகின்றனர்.
மாறுகின்றனரா? அல்லது மூளைச்சலவையினால் மாற்றப்படுகின்றனரா? என்பது வேறு.

இந்து துவத்தை மட்டுமே போதிக்கும் தொலைக்காட்சி எனக்குத் தெரிந்து எதுவுமில்லை.
ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பறப்ப இங்கே மூன்று, நான்கு தொலைக்காட்சிகள் இருக்கின்றன.

எனக்குத் தெரிந்து இந்துக்களுக்கென்று இங்கே தனி இடஒதுக்கீடு கிடையாது.
ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு இங்கே மூன்று நான்கு சதவிகித இடஒதுக்கீடு உண்டு.

மற்ற மதப்பெண்ணை மனமுடிக்கும் ஒரு இந்து, அந்த மதத்திற்கு மாறுகிறான் அல்லது மாற்றப்படுகிறான்.
வேறு மத ஆடவனை மனமுடிக்கும் இந்துப்பெண்களும், மதம் மாறுகின்றனர் அல்லது மாற்றப்படுகின்றனர்.

எந்த வாகனத்தின் முன்புறமோ அல்லது பின்புறமோ, பகவத் கீதையின் வாசகங்களை நான் பார்த்ததில்லை.
ஆனால் ஒரு குறிப்பிட்ட நூலின் வாசகங்கள் என் கண்ணில் அடிக்கடிப் படுகின்றன.

மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளையெல்லாம் உற்று நோக்கும் பொழுது,
இந்துக்கள் இந்தியாவில் சிறுபான்மையினரோ? என்ற கேள்வி என்னுள் எழுகிறது.
ஆம், 80விழுக்காடுக்கு மேலும் ஒரு மதத்தைச் சார்ந்திருந்தும்,
அவர்கள் சிறுபான்மையினரைப் போல வாழ்வது - எம் மதச்சார்பற்ற இந்தியாவில் மட்டுமே..!

எந்தவொரு இந்து குடும்பத்திலும், ஒரு நாளைக்கோ அல்லது ஒரு வாரத்திற்கோ அல்லது ஒரு மாதத்திற்கோ -
இத்தனை முறை நீ கோவிலுக்குச் செல்ல வேண்டுமென்று கூறியதாய், நான் அறிந்ததில்லை. நீங்கள்..?
ஆனால் இந்த சுதந்திரம் மற்ற மதங்களில் மறுக்கப்படுகின்றன.

மோடியை குற்றவாளியாகப் பார்க்கும் எத்தனையோ பேர், ராஜபக்சேவை அப்படிப் பார்ப்பதில்லை.
மோடி செய்தது தவறென்றாலும், மதச்சார்பற்ற நாட்டில் அவன் இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்கு முன்,
அவன் தமிழன் என்பதை உணராததேனோ?


என் நிலை: அவன் தமிழனென்றால், நானும் தமிழன்.
அவன் இந்தியனென்றால், நானும் இந்தியன்.
அவன் நண்பனென்றால், நானும் நண்பன்.
அவன் அந்த மதத்தைச் சேர்ந்தவனென்றால், நான் இந்து..!

பிற மதத்தினரை புண்படுத்துவதற்காக நான் இந்தக்கட்டுரையை இங்கே பதியவில்லை.
என் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தவே இந்தக்கட்டுரையை இங்கே பதிகிறேன்.
இந்தக்கட்டுரை யாரையேனும் புண்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தால், என்னை மன்னியுங்கள்.

எழுதியவர் : மதன்குமார் ரா (26-Sep-12, 5:55 pm)
பார்வை : 295

மேலே