கூர்ப்பு

விரிந்து செல்லும் மூலத்தொடர்கள்
வலிந்து மாறி நர்த்தனமாடும்....
சுருண்டு கிடக்கும் மூர்த்த வலைகள்
திரண்டு வந்து திசைகுழம்பும்...

அண்டத்தில் குதிக்கும் விகாரப்பிண்டங்கள்
பகுத்தறிவுத்தீ வளர்த்து பண்பாடு எரிக்கும் ....
பேருண்மை மறந்த (மனித)மண்ணாங்கட்டிகள்
கண்டது கொன்று காணாது போகும்...

கூர்ப்பு விருட்சம் வான் முட்டி தட்டி எழுப்பி
டாவின் கருத்துகளில் பிழையொன்று இயம்பும்....
மூதாதை பிரச்சினையில் முடிவொன்று கேட்டு
பேதைப்பேச்சுகளில் கல்லறைகள் வெடிக்கும்...

எழுதியவர் : S.Raguvaran (26-Sep-12, 9:40 pm)
சேர்த்தது : Raguvaran
பார்வை : 181

மேலே