ஐம்புலன்கள் கொன்று புதைத்து

கண்களில் கருவளையமிட்டு
கைது செய்தது - தொலைக்காட்சி......!
காதுகளில் ஊளையிட்டு
கண்டதை ஒளிபரப்பியது - வானொலிப் பெட்டி...!
நல்லதமிழ் இழந்து
நாக்கு நரம்பு அற்றது - ஷட் என ஆங்கிலத்தால்....!
மரங்கள் கொலை செய்யப்பட்டு
நாசிகள் கார்பன்டை ஆக்சைடையே சுவாசித்தது...!
போதை வஸ்துக்கள் புதிதாய் வந்தே
புதைத்து வைத்தது தொடு உணர்ச்சிகளை........!
ஆறாம் அறிவால் அறிவியல் விருத்தியானது ...
ஐம்புலன்கள் அடிமையானது
அடடா இது என்ன கொடுமை...?
அழிவையே ஆராய்கிறது
அடங்காத ஆறாம் அறிவு........
ஓரறிவு ஈரறிவு ஜீவன்கள் உலகில்
உருப்படியாய் வாழ்கிறது.......
ஆண்டவன் கொடுத்த ஆறாம் அறிவு
அரிவாள் கொண்டே கழுத்தை அறுக்கிறது....!