வைகைஅழகரசுவின்"அழகின்சிரிப்பு"4
நினைத்து முடித்து
மறுபடியும் நினைவுக்கு வராது!...
எழுத மறந்த ஒத்தை வரி
தொத்தைக் கவிதைகள்!!..........
தமிழர்களின் பாசக்கயிற்றில்
தற்கொலை செய்துகொள்ளும் மகிந்தா!?.....
முள்ளி வாய்க்காலில்
துள்ளி விளையாடும்
தமிழ் ஈழத்துப்
பள்ளிக் குழந்தைகள்!!.....
பிச்சை எடுக்காத யானை!!....
கடன் வாங்காத இந்தியா!!?............
அடிமனத்தின் ஆழத்தில்
தேசியக் கொடி தூக்கிப்
பிடிக்கும் என் ரத்த நாளங்கள்!!....,.
தமிழகத்துக்கு தண்ணீர் தர
மறுக்கும் கேரளா,கர்நாடகா,ஆந்த்ரா
இந்தியாவுக்கே மின்சாரம்
வழங்கப்போகும் "கூடங்குளம்"!!.......