காதல் எச்சரிக்கை!-2
----காளையரின் ஜாலங்கள்-----
பெண்ணே! கண்ணே!
மயிலே! குயிலே!
உன்னைப் போல்
ஓர் அழகி இல்லை!
காதலின் அரிச்சுவடி
ஆரம்பிப்பது இப்படித்தான்....
நீதான் என் உலகம்
நீயில்லை என்றால்
நான் இல்லை
காதல் குதிரை
இப்படித்தான் குதிக்கும்
எளிதில் புரியாது
என்னவென்று தெரியாது.
அகரம் தெரியாதவனும்
காதல் கொண்டால்
அம்பிகாபதி ஆகிடுவான்
அடுக்கு மொழியில்
பாயிரம் ஆயிரம் பாடுவான்
ஆராதனை செய்வோரிடம்
அடங்கி விடாதே!
அவைகள்
உன்னை அழிப்பதற்கு
அடுக்கிய வார்த்தைகள்
போதை வார்த்தைகளில்
புதைந்து விடாதே!
சொடுக்கிய சாட்டையில்
சிக்கிக் கொள்ளாதே!
வேட்டை நாய்களுக்கும்
வீட்டு நாய்களாய்....
வாலை ஆட்டும்
காலைச் சுற்றும்
மயங்கி விடாதே!
பாலியல் காதல்
வாழ்வை
பாழடித்து விடும்
காதல் எச்சரிக்கை!
காதலர்களே!
பாலியல்
காதல் ஜாக்கிரதை!
(அடுத்து வருவது
கன்னியரின் கதிர்வீச்சு!
காதல் எச்சரிக்கை! ...........தொடரும்))