உலகம் உன்னை மன்னிக்காது
கோயில் குளத்தை சுற்றியும்
தவமாய் தவமிருந்தும் -தொட்டிலில்
துள்ளி விளையாட ஒரு
பிள்ளை கனி இல்லை
என்றெண்ணி ஏங்கும்
ஜனம் ஏராளம் !
கன்னி ! மணியே ! கட்டிகரும்பே !
என் செல்லமே ! என்று
கொஞ்சி மகிழ
ஒரு மழலை இல்லாமல் தவிக்கும்
தாய்மார்களும் ஏராளம் !
ஆனால் ! பெண் பிள்ளை என்று
பிறந்தால் குப்பைதொட்டியில்
தூக்கி வீசி எறியும்
ஈவு இரக்கமற்ற பெண்களும்
இப்பூமியில் இருக்கத்தான்
செய்கிறார்கள் !
பெண்ணே !
நீ குப்பை தொட்டியில்
வீசி விட்டெறிந்த பெண் மழலை
ஒரு அன்னை தெரசாவாக இருக்கலாம்!
ஒரு இந்தியாவின் இரும்பு
மங்கையாக இருக்கலாம் !
இந்தியாவின் தங்க மங்கை
பீ.டி .உசாவாக இருக்கலாம் !
ஏன் ! விண்வெளியில் வளம் வந்த
நம் கல்பனா சாவ்லவாக இருக்கலாம் !
பெண்ணே !
இனியும் இதுபோன்ற மடத்தனமான
ஈவு இரக்கமற்ற செயலை
மறந்தும் செய்து விடாதே !
இனியும் இதுபோன்ற
இழிசெயல் நீ செய்தால்
உலகம் உன்னை மன்னிக்காது !
----------------------------- சிங்கை கார்முகிலன்