சொல்ல முடியாத காதல்

சொல்ல முடியாத காதல்
கோழை இதய ஏழை இவள்!

காளை அவன் இளமை விம்பம்
விழிகளுக்குள் வீழ்ந்து

தாளில்லா இதயத்துக்குள் நுழைந்ததும்!
கற்பனைகள் அளவில்லா தொடராகிட்டு.

தூக்கங்கள் தொலைத்து கனவிலும்
துயரங்கள் தொட்டிட முடியாமல்!....

கண்டதும் கட்டியணைத்திடும் ஆசை....
கை விரல்கள் ஓவிய மடல் வரையது
கால் விரல் மெட்டியும் வெட்கத்தில்
கோலம் போடுது மண்ணில்!......

இவள் தெருக்கள் சிரிக்குது!.....
திரை நிலவும் திகைதுப்போகிறது!...
தீபம் ஏற்றும் கதிரவனும் திசை தேடுகிறது!.....

காதலை அவனிடம் எத்தி வைக்கும்வரை
இயற்கை,செயற்கையென நிலை குலைகிறது
கிரகங்களும் சுற்றிடாமல் தாமதிக்கின்றது!.....
இவள் ஏக்கம் எல்லாம் அறிந்தும் ....
அவன் மட்டும் அறியவில்லை .......
அழகிய வேதனை!
சொல்ல முடியா காதல்.
கோழை பெண்!....

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (29-Sep-12, 6:05 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 1025

மேலே