யார் யாருக்கு அழுதனர்
விதைத்தவனை நினைத்து
பயிர்கள் அழுதது
பயிர்களை நினைத்து நிலம் அழுதது
நிலத்தை நினைத்து வானம் அழுதது
வானம் அழுததால் நிலவு இல்லை
நிலவை நினைத்து அவள் அழுதால்
அவளை நினைத்து நான் அழுதேன்
என்னை நினைத்து விதைத்த என் தந்தை அழுதார் !
யார் யாருக்கு அழுவது !

