$$$ கதிரவனையும் கவனித்தேன் $$$

வர வர வயதும் கூடியதோ
வேதனைகள் வாட்டியதோ
எரிந்து விழுகின்றாய் – காரணமும்
தெரிந்துகொள்ள விடமாட்டாய்


அஸ்தமிக்கும் போதும்
அடங்காத கோபமாய்
அந்திவானம் சிவக்க
மறைந்து போவாய்


உன் ஒளிப் போர்வையை
உருவிக் கொண்டு
உத்தரவின்றி உறங்கிட
களைப்போடு கடந்துவிடுவாய்


போதும் போதும் என்றே
பொழுது சாயும் வரை
பொழிந்திடும் அனலை
பொறுப்போடு எடுத்துச் செல்வாய்


ஒளி தரும் விளக்காய்
வெளிச்சமும் தந்துவிட்டு
எண்ணை தீர்த்துவிட்ட திரியாய்
அணைந்தும் போவாய் !!!

எழுதியவர் : (1-Oct-12, 12:04 am)
பார்வை : 166

மேலே