பார் போற்றும் பெண்மை

நம் கையில் உலகமடி
நங்கையாரான நமக்காகவே
இந்த உலகமடி

அழகான உருவமடி
அன்பை மட்டுமே
கொடுக்கும் குணமடி

கலங்காத நெஞ்சமடி
கனல் போன்ற பா(ர்)வையடி

ஓர் உயிரை சுமக்கும் சக்தியடி
நாம் உணர்வுகளை மதிக்கும் உத்தமியடி

சரித்திர புகழ்
சாவித்திரியும் கண்ணகியும்
சீதையும் இப்போது நாம்தானடி

நமக்கு பல்வேறு பெயர்களடி
பராசக்தியே அன்னையடி

கொடியவரை கண்டால்
கொதிக்குமடி நெஞ்சம்
அவர்களை கொன்றாலே
அமைதியாகும் இந்த
பிரபஞ்சம்

ஒழுக்க விதி மீறாது நடக்க
தலைவிதியையும் மீறி
தலை நிமிர்ந்து நிற்கும் நாம்
மீசை வைக்கத பாரதியடி
பார் போற்றும் பெண்மையடி


- PRIYA

எழுதியவர் : PRIYA (2-Oct-12, 2:46 pm)
பார்வை : 385

மேலே