காதல் தேசம்

காற்றினை
பேனா முனையில்
நிற்க வைத்து
கற்பனை
மையை கலந்து
கவிதை படைத்து
காதல் பட்டம் செய்து
வானில் சிறகடிக்கும் தேசம் ......
மொழி மறந்து
ஜாதி தொலைந்து போன
புதிய உலகம் ....
காகிதப் பூக்கள்
மலர்ந்து
மணம் பரப்பும் ...அதிசயம்
ஏற்ற தாழ்வுகளை
ஒழிப்பதற்க்கான
புதிய கொள்கை
இங்கு சட்டமாய் இருக்கும் ....
பாரதியின்
புதுமை பெண்களும்
வைரமுத்துவின்
இலக்கிய பெண்களும்
இங்கு ஏராளம் ....
----எனது பயணம் காதல் தேசத்தை நோக்கி -----
அன்புடன் ,
தமிழ் சௌந்தர்