ஆலமரத்து பஞ்சாயத்து
ஆலமரத்து அரசசபை
பட்டு துணி விரித்த
திண்ணையில்
பஞ்சாயத்து
பட்டு வேட்டி
பளபளக்கும் சட்டை
முறுக்கிய மீசை
முழங்காலில்
அடியாட்கள்
கூட்டம் கூடியது
சிலர்
பஞ்சாயத்தை
பார்த்து கும்பிட்டனர்
அப்போது அழுதபடி
பெண் ஒருத்தி வந்தாள்
ஐயா தர்மதுரை
அபலைக்கு நீதி வேண்டும்
என்றாள்
அப்படி என்ன நடந்தது
பஞ்சாயத்து
பகீர் கேள்வி
இரவு வேலை
காற்றுக்கு
கதவை திறந்து வைத்தேன்
காமுகன் என்கற்பை
களவாடி விட்டான்
கண்ணீருடன்
கதறினால்
யாரவன்
முன்னே வாடா
முட்டாளே என்றார்
வந்தான் மச்சகாளை
என்மாமன் மகள் அவள்
எவருக்கோ பெண்சாதி
எனக்கு இல்லையா
என்றான்
ஆசையால் அல்ல
உரிமைக்காய்
உடல் மேய்ந்தேன்
என்றும் சொன்னான்
தண்டனை உன்டோ
தவறாமல் சொல்க
என்றான்
தன் மீசையை
முறுக்கியபடி
புளியமரத்தில்
கட்டுங்கள்
ஆயிரம் அபராதம்
என்றுரைத்தார்
நாட்டம்மை
நல்ல தீர்ப்பு
கிடைக்கும் என
நம்பி வந்த பெண்ணோ
நடந்தாள் அழுகையுடன்
ஆயிரம் தீர்ப்புகள்
ஆலமரத்தில்
இப்படிதான்
அதைவிடுதது
நீதிமன்றம்
வந்தால்
என்ன நீதி
கிடைக்கும்?
பெண்களெல்லாம்
புலிகளாய் மாறி
புறப்பட்டு எழும்வரை
ஆயிரம் மச்சகாளை
ஆசையில் பயிர் மேய்வான்
அதையும்
பஞ்சாயத்து
பக்குவமாய்
பாதுகாக்கும்