வருமா வராதா???
வாடும் குழந்தை வயலிலே
வற்றிப்போன வயிறு தரையிலே
வானம் பாத்து
பூத்து போச்சு கண்ணு முழி
பயிற வந்து சேரல
கைய ஏந்தி கேட்ட நதி
பாவி சனம் வாடுது
பயறு இங்க காயுது
பெத்த பிள்ள போல
பாத்து பாத்து வளர்த்த நெல்லு
சாக கிடக்குது
வராத காவிரி வருமுன்னு நம்பி
மனசு இறங்கி
காவிரி வரதெப்போ
எம் புள்ள வீடு வந்து
சேர்வதெப்போ???